தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி அவர்களின் உத்தரவு பேரில், மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தை சார்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி ராமானுஜம் புதூரில் கராத்தே பயிற்சி வகுப்புகள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் மூலம் நடத்த பெற்றது. இதில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவிகள் தற்காப்பு கலை பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராமானுஜபுதூர் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ,பள்ளி ஆசிரியர்கள், கருங்குளம் வட்டார பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் வெயில்முத்து, ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் செய்திருந்தனர்.


