செய்துங்கநல்லூரில் புதிய பள்ளி வாசல் அருகே 10 ந்தேதி இரவு கன்று குட்டி ஒன்று விபத்தில் சிக்கி பள்ளத்தில் விழுந்து கிடந்தது. இதை பற்றி அறிந்த செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் அந்த கன்று குட்டியை மீட்டு சித்தா மருத்துவ மனை கட்டிடத்தின் முன்பே வைத்து பாரமரித்து வருகிறார். கன்று குட்டியால் நடக்க முடியவில்லை. எனவே செய்துங்கநல்லூர் கால்நடை மருத்துவ மனை மூலமாக இதற்கு சிகிச்சையும் நடந்து வருகிறது. கடந்த 2 நாள்களாக இந்த கன்று குட்டி யாருடையது என்று அக்கம்பக்கத்தில் தேடியும் யாரிடமும் இருந்து தகவல் வரஇல்லை. எனவே இந்த கன்று குட்டியை பஞ்சாயத்து தலைவர் தன்னுடைய பராமரிப்பில் வைத்து கவனித்து வருகிறார். படத்தில் காணும் இந்த கன்று குட்டியை பற்றி தகவல் அறிந்தவர்கள் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவரிடம் தொடர்பு கொள்ளலாம். விபத்தில் சிக்கிய கன்று குட்டியை காப்பாற்றி பராமரித்து வரும் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.


