சாகர் மித்ரா திட்டத்தில் பணிபுரிந்திட விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி மீன்வள திட்டத்தின் கீழ் பல்நோக்கு சேவை ஊழியர்களாக தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மற்றும் மணப்பாடு மீனவ கிராமங்களில் ஒப்பந்த அடிப்படையில் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையில் சாகர்மித்ரா பணியாளர்களாக பணிபுரிந்திட
01.07.2024 அன்றைய தேதியில் 35 வயது நிறைவடையாத மீன்வள அறிவியல் (Fisheries Science) / கடல் உயிரியியல் (Marine Biology) / விலங்கியல் (Zoology) பட்டபடிப்பு/ பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று தருவைகுளம், மணப்பாடு மீனவ கிராம சுற்று வட்டார பகுதியில் வசித்து வரும் தகுதியான நபர்கள் 17.11.2025 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வடக்கு கடற்கரைசாலை, மீன்வளத்துறை வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் வார வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


