தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர்கள் அய்யம் பிள்ளை, பழனிச்சாமி, ஞானகுரு மற்றும் தலைமை காவலர் பொன்ராம் ஆகியோர் நேற்று இரவு புதிய துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோடு கேம்ப் 1 சர்வீஸ் ரோட்டில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் பைக்கில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, பெட்ரோல் டேங்க் மேல் வைத்திருந்த சாக்குப் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, தெர்மல்நகர் கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் ரீகன் (21), சேகர் மகன் சதீஷ் (22) மற்றும் 3 இளம்சிறார்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


