தூத்துக்குடியில காலி மனையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மில்லர் புரத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகில் சுமார் 10 சென்ட் காலி மனை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த இடத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளதால் தூர் நாற்றம் வீசுகிறது.
மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் உடனடியாக இந்த காலி மனை உரிமையாளரிடம் அபராத தொகை வசூல் செய்து மாநகராட்சி மூலம் மணல் அடித்து தண்ணீரை தேங்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திள்ளனர்.


