தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கான தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏ.ஐ.சி.சி.டி.யூ., கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் சார்பில் சகாயம் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு OURLAND நிறுவனம் மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது 03/தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பாக கோரிக்கை வைத்து அதை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் இந்த மாதம் 11/11/2025ஆம் அன்று தான் வழங்கப்பட்டது. மேலும், நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூபாய் 2500 பிடிக்கும் செய்யப்பட்டுள்ளது அட்வான்ஸ் 2000 ரூபாய் ஆனால் பிடித்த செய்தது 2500 ரூபாய் மாதம் 500 விதம் பேச்சுவார்த்தையில் ஒத்துக் கொண்டவாறு பிடிக்க வேண்டும் மீதம் 2000 ரூபாயை தொழிலாளர் அக்கவுண்டில் வரவு வைக்க வேண்டும். இல்லையென்றால் OURLAND நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.


