தற்போது திரைக்கு வந்து சமுக நல்லிணக்க அதிர்வை ஏற்படுத்திய திரைப்படம் அயோத்தி. சசிகுமார் கதாநாயகனாக நடந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பாக பேசப்பட்டது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்லை மாவட்டத்தினை சேர்ந்த மந்திர மூர்த்தி . இவரை இந்த திரைப்படத்திற்காக உலக நாடுகளில் அழைத்து கௌரவப்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு விருதுகளை உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் விருது வாங்கி வருகிறார் இயக்குனர் . அவரை உள்ளூர் பெருமக்கள் பாராட்டும் விதமாக வருகிற 14 ந்தேதி மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை ஊசிகோபுரம் எதிரே உள்ள பால பாக்யா மினி ஹாலில் பாராட்டு விழா நடைபெறுகிறது. Êசாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் தலைமை தாங்குகிறார். த.மு.எ.க.ச மணிமாறன், திரைப்பட திறனாய்வாளர் காஞ்சனை மணி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எழுத்தாளர் எம்.எம்.தீன், குறும்பட இயககுனர் முத்தமிழ் ஆகியோர் பாராட்டி பேசுகிறார்கள். நெல்லையில் உள்ள முக்கிய அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தீபம் இலக்கிய அமைப்பு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் எம்.எம். தீன், கே. எஸ்.முத்தமிழ் ஆகியோர் செய்து வருகின்றனர்.


