தூத்துக்குடி புறநகர் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தூ.சவேரியார் புரம் புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் சிறப்பாக பங்கு பெற்றனர்
தூத்துக்குடி புறநகர் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தருவை மைதானத்தில் நடைபெற்றது . இதில், புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளி மாணவி சகாய ஜெமிமா 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டரில் முதலிடம் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் கேடயத்தை பெற்றுள்ளார். மாணவர் ராஜசேகர் 100 மீட்டரில் முதலிடம் குண்டு எரிதலில் இரண்டாம் இடம் நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்று பெற்றுள்ளான்.
ஆன்சிலின் 600 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாவது இடமும், கௌசல்யா நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் அபியா ஏஞ்சல் 200 மீட்டரில் ஓட்ட போட்டியில் மூன்றாவது இடமும் 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் ஆன்சிலின், அபியா ஏஞ்சல், அபிஷா, பெலினா ஆகிய மாணவிகள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத்தகுதி பெற்றுள்ளனர் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சகாய ஜெமிமா, பிரமில்டா, ஜெனியா, அந்தோணி அஸ்விதா ஆகிய மாணவிகள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்
17 வயதிற்கு உட்பட்ட சதுரங்க போட்டியில் மகாலட்சுமி முதலிடம் பெற்றுள்ளாள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் தந்தை குழந்தை ராஜன் பள்ளியின் தலைமை ஆசிரியை மரிய செல்வராணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் வாழ்த்தினார்கள் மேலும் சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளை விளையாட்டிலும் படிப்பிலும் சமமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இந்த நிகழ்வில் ஊர் நிர்வாகிகள் அருள் சகோதரிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை வாழ்த்தினார்கள்


