நெல்லை சேவியர் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ரயான் குழுமத்தின் ‘முதல் மரியாதை’ நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு மன ஊக்க உரையை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எழுத்தாளர் ரியாஸ் ஆகியோர் வழங்கினர். ரயான் பொது மேலாளர் கோபிநாத் வரவேற்றார். நெல்லை லைஃப் சி.இ.ஓ. கணேசமூர்த்தி நோக்கவுரையாற்றினார். தலைமையுரையை ரயான் நிர்வாக இயக்குநர்கள் இம்ரான் கான், செய்யது மீரான் ஆகியோர் ஆற்றினார்கள்.

மாணவர்களுக்கான விருதுகளைத் திருநெல்வேலி சரகக் காவல்துறைத் துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, சிறப்பு அழைப்பாளர் ‘நீயா நானா’ கோபிநாத், ரோட்டரி மாவட்ட ஆளுநர் காந்திகிருஷ்ணன், ப்ரொபஷனல் கொரியர் நிறுவனர் மேகலிங்கம், முத்தாலங்குறிச்சி காமராசு, புத்தனேரி செல்லப்பா, ரயான் இயக்குநர்கள் இம்ரான் கான், செய்யது மீரான், நெல்லை லைஃப் கணேசமூர்த்தி ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட அரசுப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

ரயான் குழும நிறுவனர்கள் இம்ரான் கான், செய்யது மீரான் ஆகியோர் நன்றி கூறினர்.


