தூத்துக்குடி மைய நூலகத்தில் இந்திய நூலக தந்தை முனைவர் சீ. இரா அரங்கநாதன் பிறந்த நாள் விழா நூலகர்தினவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். இரா அரங்கா நாதன் படத்துக்கு மாலை அணவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் மா. ராம்சங்கர் வரவேற்று பேசினார். தூத்துக்குடி கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் பணி நிறைவு து.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். அவர்பேசும் போது கூறியதாவது. இன்றைக்கு நூலகம் நடத்துவது என்பது சாதரணமான காரியம் இல்லை. நம்மை விட கரையான் வேகமாக படிக்கும். அது முழுபுத்தகத்தினை காணாமல் ஆக்கி விடும். பொக்கிஷங்களை கரைந்து போக வைத்து விடும். எனவே கரையானிடம் இருந்து புத்தகத்தினை காப்பாற்றுவதே தனிக்கலையாகும். அந்த கலையை செய்யும் நூலகரை மனதார பாராட்டு கிறேன். ஒரு காலத்தில் நூலகம் என்பது அறிவை வளர்க்கும் இடமாக இருந்தது. தற்போது போட்டி தேர்வுக்கு தயாராகும் தளமாக மாறி விட்டது. எனவே நூலகர்களும் மக்கள் போக்குக்கு தங்களை மாற்றிக்கொண்டு போட்டித்தேர்வு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கவேண்டும். ஒரு காலத்தில் கல் வெட்டு, ஓலைச்சுவடி என்று இருந்ததை தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் புத்தகமாக மாற்றினார்கள் அதற்காக ஊர் தோறும் அலைந்து ஓலைச்சுவடிகளை சேகரித்து அடுத்த நிலையான புத்தக நிலைக்கு கொண்டு வந்தார்கள். தற்போது எல்லாமே டிஜிட்டல் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. நூலகர்களும் டிஜிட்டல் நிலைக்கு மாற தயாராக வேண்டும்.
தமிழக அரசு தனிநபர் நூலகத்துக்கு விருதளிப்பதாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். தனிநபர் நூலகம் வைத்திருப்பபோர் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த அறிவிப்பு தனிநபர்கள் தங்கள் இல்லங்களில் நூலகம் அமைக்க முயற்சி செய்வார். தமிழக அரசின் இந்த அறிப்பை வரவேற்போம் என்று அவர் பேசினார். கொற்கை நூலகர் மும்தாஜ் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து நூலகர்களிடையே விளையாட்டு போட்டி நடந்தது அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவடட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம் பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டார நூலகர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட மை நூலக இரண்டாம் நிலை நூலகர் கொ. சங்கரன் நன்றி கூறினார்.
தொடர்பானவை
October 4, 2024