நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழா ஆறு நாட்கள் நடைபெற்றது.
நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயப் பிரதிஷ்டைப்பண்டிகையை முன்னிட்டு முதல்நாள் காலையில் உபவாச ஜெபமும் மாலையில் களக் காடு ஒய்.எம்.எம். குழுவினரின் கிறிஸ்தவ இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரண்டாவது நாள் காலையில் ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை நடைபெற்றது. இதில் ஆர்.பிரபு கிதியோன் செய்தி கொடுத்தார்.அன்று இரவும், மூன்றாவது நாள் இரவும் கன்வென்ஷன் கூட்டங் கள் நடைபெற்றது
.இதில் செய்தியை ஆர். பிரபு கிதியோன், நாசரேத் யெகோவாயீரே ஜெபவீடு ஊழிய நிறுவனர் கொடுத்தார்.பாடல்களை திரும றையூர் பிரைட் ஆர்க்கெஸ்ட்ராகுழுவினர் பாடினர். நான்காவது நாள் காலையில் பரி.திருவிருந்து ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையில் செய்தி யை குருவானவர் ஜாண்சாமுவேல் வழங்கினார். மாலையில் சபை மக்கள் பங்கு பெற்ற விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
ஐந்தாவதுநாள் மாலையில் ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் செய்தியை நேஷனல் மிஷனெரி சொசை ட்டி பொருளாளரும்,பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி செயலாளருமான டி.எஸ்.செளந் திர பாண்டியன் வழங்கினார். நிறைவு நாளன்று அதிகாலையில் ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை மற்றும் பரி.திருவிருந்து ஆராதனை நடந்தது.ஜி.பாஸ்கரன் தேவசெய்தி கொடுத்தார்.மாலையில் அசன விருந்து பரிமா றப்பட்டது.இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் திருமறையூர் சேகரத்தலைவர் ஹெச்.ஜான் சாமுவேல் தலைமையில் சபை ஊழியர் ஸ்டான்லி ஜாண்சன் துரை முன்னிலையில் அசனக் கமிட்டி தலைவர் பாக்கியராஜ், உபதலைவர் ஜீவன், செயலாளர் ஆசிர் துரைராஜ் ஜெயசிங், இணைச்செயலாளர்கள் தேவதாஸ், ஜாண்சேகர், ஜெபக்குமார், ரூபன் காலிசன், தணிக்கையாளர்கள் ஜெகதீசன் வேதநாயகம், அகஸ்டின் செல்வராஜ், காட்வின் டேனியல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கௌரவ ஆலோசர்கள்,சபை மக்கள் செய்திருந்தனர்.


