கோவில்பட்டியில் ஜேசிஐ சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஜேசிஐ சார்பில் ஜேசிஐ தேசிய துணைத் தலைவரின் அதிகாரப்பூர்வ வருகையையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜேசி பவனில் நடந்தது. கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் தீபன் ராஜ் தலைமை வகித்தார். மண்டல தலைவர் கார்த்திக்,மண்டல அலுவலர்கள் வெண்மணி, சுந்தரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய துணை தலைவர் பரத் ஆச்சார்யா சிறப்பு விருந்தினராக கலந்து, தாய் அல்லது தந்தை இழந்த அரசு பள்ளி 5 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான் நிதி உள்பட ஒரு லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கி புதிய உறுப்பினர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். இதில் முன்னாள் தலைவர்கள் கபிலன்,கண்ணப்பன், ஜே.காம் சேர்மன் அருண்பிரசாத். உள்பட ஜேசிஐ நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.


