கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் உலக யானைகள் தின விழா நடந்தது.
உலகம் முழுவதும் யானைகளை பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தின விழா கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யானை முகமூடி அணிந்து, “யானைகளை பாதுகாத்திடவும் வாழ்விடங்களை உருவாக்கிடவும், யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் உலக யானைகள் தின சிறப்புரையாற்றினார். இதில் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் உள்பட பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக பள்ளி மாணவி கீதா வரவேற்றார். நிறைவாக பள்ளி மாணவி கிரிஜா நன்றி கூறினார்.


