தூத்துக்குடி, நெல்லை, குமரி உட்பட 33 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


