இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பிற்கு விருப்பமுள்ள இளைஞர்கள் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். .
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப் படையில் அக்னி வீரா்களுக்கான (ஆண், பெண்) தோ்வு தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்க விரும்புவோா் https://www.joinindiannavy.gov.in/en/page/agniveer-ways-to-join.html இணைய தளம் மூலம் வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.


