தூத்துக்குடி நெய்தல் பூங்கா பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி லயன்ஸ் டவுன் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள நெய்தல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வரும் நாட்களில் அதனை நிறைவேற்றி தருவதாக பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


