தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கீழ கோட்டை வாசல் தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி மகன் செந்தில் ரமேஷ் (41). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மாலை பத்மநாபமங்கலம் கிராமத்தில் பசும்பொன் முத்துநகரில் ஆட்டோவை ஓட்டி சென்றபோது நடுரோட்டில் 4 பேர் மது அருந்தி கொண்டிருந்தார்களாம். இதை பார்த்ததும் ஆட்டோ டிரைவர் செந்தில் ரமேஷ் ஹாரன் அடித்தாராம்.
அப்போது போதையில் இருந்த 4 பேரும் அவரிடம் தகராறு செய்து மது பாட்டிலால் குத்தினார்களாம். மேலும், ஆட்டோ கண்ணாடிகளை நொறுக்கினார்களாம். இதில் காயமடைந்த செந்தில் ரமேஷ் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜன் விசாரணை நடத்தி, பத்மநாபமங்கலம் கிராமத்தை சேர்ந்த பலவேசம் மகன் தேவராஜ் (19), மாரியப்பன் மகன் ஆறுமுகம் (23), நெல்லையை சேர்ந்த பரமசிவம் மகன் ஜெயராஜ் செல்வம் (35) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மேலும், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


