கேம்பலாபாத் கிராமத்தில் வாழ்ந்து காட்ட புத்தாக்க திட்ட பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி ஒன்றியம் கேம்லாபாத் ஊராட்சியில் இளைஞர்களுக்கான ப்ளம்பிங் பயிற்சி சமுதாய திறன் பள்ளி மூலம் 30 நாள் பயிற்சியாக துவங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை வகித்தார். ஆணையாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட இணை இயக்குனர் பாபு துவக்கி வைத்தார். மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்செல்வன் விழா சிறப்புரை ஆற்றி திட்ட நோக்கங்களை எடுத்துரைத்தார். மாவட்ட அலுவலர் ராதா வரவேற்புரை கூறினார். புத்தாக்க திட்ட அணித்தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.


