தூத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசன் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ஒரு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் மாசிமகம் திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த விழாவில் பக்தர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதித்ததால் ஏராளமான பக்தர்கள் வாகனத்திலும், பாதயாத்திரையாகவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இரவு பகலாக வந்து கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து செய்துங்கநல்லூர் வழியாக செல்லும் சாலையும், ஏனைய பகுதி வழியாக திருச்செந்தூர் வரும் அனைத்து சாலையும் சிறிய அளவில் இருப்பதினால் சாலையில் வாகன ஒட்டிகள் மிக கவனமாக வண்டியினை ஓட்ட வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் தை பூசம் மாசி மகம் போன்ற விழாவின் போது பாதயாத்திரை சென்ற பக்கதர்கள் மீது இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாதனால் விபத்து ஏற்ப்பட்டு உயிரிழப்பும் ஏற்ப்பட்டுள்ளது.
பாதயாத்திரை செல்பவர்கள் இரவு நேரங்களில் எளிதாக நடக்க முடியும் என்பதனால் அதிகமான பக்தர்கள் இரவு பயணத்தையே விரும்புகிறார்கள்.
இது போன்ற விபத்தினை தடுக்க பக்தர்ளுக்கு ஒளிரும் தன்மையுள்ள சிகப்பு நிற ஸ்டிக்கர்களை சிறிய அளவில் பக்தர்களின் கை பைகளில் ஒட்டினால் இருளில் சென்றாலும் வாகனத்தின் விளக்கு ஒளிபட்டு மின்னும். இதனால் வாகன ஒட்டிசுதாரித்து கொள்ளவும் முடியும், முடிந்த வரை விபத்தினை தடுக்கவும் முடியும்.
திருநெல்வேலியில் இருந்து செய்துங்கநல்லூர் வழியாக வரும் பக்தர்களுக்கு செய்துங்கநல்லூர் காவல் நிலையம் சார்பாக ஸ்டிக்கர்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முடியும். மேலும் அப்பகுதி தன்னார்வலர்களையும் இதில் இனைத்து செயல்படுத்தலாம்.
இது போல பக்தர்கள் வரும் வழியில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் இந்த விழிப்புணர்வை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை முன்னெடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பாகவும், வாகன ஒட்டிகள் சார்பாகவும் கோரிக்கை வைக்கிறேன்.
என்று அவர் அதில் கூறியுள்ளார்.