108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9 வது திருப்பதியும் குருவுக்கு அதிபதியானதுமான ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் மூலவர் ஆதிநாதர். இத்திருத்தலத்தில் தான் வேதம் தமிழ் செய்த மாறன் என்று போற்றப்படும் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகத்தில் அவதாரம் செய்தா£¢. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகின்றது.
இதற்காக இந்தாண்டு மாசித்திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் ஆதிநாதர் மற்றும் சுவாமி நம்மாழ்வாருக்கு கும்ப பூஜை மற்றும் கொடி பூஜை நடந்தது. அதன்பின்னர் கொடிப்பட்டம் மங்கல வாத்தியங்கள் முழங்க வந்து நம்மாழ்வார் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இன்றிலிருந்து 13 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றார். 9ம் திருநாள் தோ¢த்திருவிழாவும், 10,11 ம் திருநாள் நம்மாழ்வா£¢ தெப்பத்திருவிழாவும் தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


