தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த நாளை ஒட்டி பேச்சுப்போட்டி நடைபெற்றது.
கல்லூரியின் நூலக குழுவுடன் வாசகர் வட்டம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து நடத்திய போட்டியில், கவியும் காவலராகிய பாரதியார் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ பெண் விடுதலைக்கு பாரதி எழுதிய கவிதைகளை நினைவு கூர்ந்தார் சிறப்புரையாற்றிய தூத்துக்குடி வானொலி நிலைய மேனாள் நிகழ்ச்சி தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் மகாகவி பாரதி இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று குறிப்பிட்டார்.
பேச்சுப் போட்டியில் பதினாறு மாணவிகள் கலந்து கொண்டு பேசினர். தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வினிதா, பிரியங்கா, அந்தோணி, மெல்பா சரணோன், விஜயலட்சுமி, எலிசபெத் ரெஜினா, ஜேம்ஸ் அந்தோணி மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் ரவி. செல்வின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


