தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் இல்லா தமிழ்நாடு 100 நாள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செய்துங்கநல்லூர் வாரச் சந்தையில் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிநாதன் துவக்கி வைத்தார்.
கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் அ.பாலகண்ணன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக சுகாதாரத் துறையின் சார்பாக காசநோய் ஒழிப்பு பிரச்சாரம் 07.12.2024 முதல் 100 நாட்கள் நடைபெறுகிறது. காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறிப்பாக பொதுமக்களிடையே ஆரம்ப காலத்திலேயே, பாதிப்பை கண்டறிந்து உடனடி சிகிச்சை மேற்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் கிராம சுகாதார தூதுவர் முத்துலட்சுமி, சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்


