கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப கால்நடைகளுக்கான மருத்துவம் மற்றும் தடுப்பூசிகளை போடாவிட்டால் கால்நடைகள் பெரிதும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது, சிலநேரம் கால்நடைகள் இறந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் அதிகமாக இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் கால்நடை நலம் மற்றும் நோய் மேலாண்மை குறித்து டயல் அவுட் கான்பிரன்ஸ் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பறக்கை கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் கால்நடை மருத்துவர் ஜென்ஜிஸ் இனிகோ அவர்கள் கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மரி ஆடுகள், மற்றும் கோழிகளை கோடைகாலங்களில் தாக்கும் நோய்கள் குறித்தும் மற்றும் அவைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் குடற்புழு நீக்க மருந்து கொடுப்பதின் அவசியம், மடிவீக்க நோயிலிருந்து கறவை மாடுகளை பாதுகாப்பது, உண்ணிகளை தவிர்த்தல், உணவு மேலாண்மை, தடுப்பு ஊசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் சுமார் 30 கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


