தூத்துக்குடி மாவட்டத்தில் முடிதிருத்தும் கட்டணம் தற்போதுள்ள கட்டணமே 2025ஆம் ஆண்டிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கூட்டம் சிஐடியூ அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் டென்சிங் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல் சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். நாகராஜ் வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.
இக்கூட்டத்தில், கூலி நிர்ணயம் தற்போது உள்ள விலையே அடுத்து ஆண்டும் வாங்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முடிதிருத்தும் நிலையம், பெண்கள் அழகு நிலையம், தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா அல்லது தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும், நலவாரியம் அலுவலகம் மூலம் கடைகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கிட வேண்டும். முடிதிருத்தும் மற்றும் பெண்கள் அழகு நிலைய உறுப்பினர்கள் அனைவரையும் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்.
முடிதிருத்தும் கடைகளுக்கு புதுப்பிக்க வட்டி இல்லா கடன் வழங்கவேண்டும். பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். முடிதிருத்தும் கடைகளுக்கும், பெண்கள் அழகு நிலையத்திற்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கிட வேண்டும். தூத்துக்குடியில் காய்ச்சல், இரும்மல் சளிபிடிப்பது இதனால் வைரல் காய்ச்சல் வருவதால் முகாம் அமைத்து நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் துணைத் தலைவர் கே. ஞானசேகர், கே. முருகன் துணைச் செயலாளர், ஆர். கருணாமூர்த்தி துணைச் செயலாளர், முன்னணி நிர்வாகிகள் திருமணி, மாரிமுத்து மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். நிறைவாக மாவட்ட பொருளாளர் கே. வேல்முருகன் நன்றியுரை வழங்கினார்.


