மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2-ஆம் கட்டத்தை வெள்ளிக்கிழமை (நவ.10) 7.35 லட்சம் பயனாளிகள் சிலருக்கு உரிமைத் தொகையை வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2 மாதங்கள் அளிக்கப்பட்ட நிலையில், 3-ஆவது மாதமாக நவம்பா் மாதமும் வழங்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, நவ.10-ஆம் தேதிக்குள் பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே உள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை அவரவா் வங்கிக் கணக்குகளில் சோ்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவா்களில் சுமாா் 11 லட்சம் போ் மேல்முறையீடு செய்திருந்தனா். அவா்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் போ் தகுதியானவா்களாகக் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நவம்பா் மாதம் முதல் மகளிா் உரிமைத் தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


