சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் தெற்கு பேய்குளம் சிகரம் அறக்கட்டளை சார்பில் TNDTA குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் சட்ட நுண்ணறிவு முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மாணிக்கம் தலைமை தாங்கினார். சிகரம் இயக்குநர் முருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் வேணுகோபால் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்குச் சட்ட நுணுக்கங்கள் பற்றி விளக்கிப் பேசினார். பின்னர் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வலர் மகேந்திரன் நன்றி கூறினார்.


