நாசரேத்தில் புதிய நூலக கட்டிடப் பணிகளை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், அழகப்பபுரம் ஊராட்சியில் அறிஞர் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினை மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தலைமையில் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நாசரேத் தேர்வுநிலை பேரூ ராட்சியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்படவுள்ள நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள டேனியல் தெரு முதல் ஆசிர்வாதபுரம் வரை புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினைமாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ் தலைமையில் தமிழக மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) கார்த்திகேயன், ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி, திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், அழகப்பபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பூமாரி பாலமுருகன், நாசரேத் பேரூராட்சித் தலைவர் நிர்மலா, துணைத்தலைவர் அருண்சாமுவேல், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், நா நாசரேத் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் எட்வர்ட் கண்ணப்பா, அனி சாலமோன், ரதி சந்திரன், ஜெயா, விடிலா பால்ராஜ், பெனிட்ரோ, அதிசயமணி, பத்திரகாளி, ஐஜினிஸ், வள்ளுவர் வாசகர் வட்ட தலைவர் அய்யாகுட்டி, துணைத் தலைவர் கொம்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் பொன் ராதா நன்றி கூறினார்.


