தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாரின் 102-வது நினைவு தினத்தை முன்னிட்டு மகாகவி தினம் அனுசரிக்கப்பட்டது.
மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் மகாகவி தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வ.உ.சி கல்வியியல் கல்லூரி இணை பேராசிரியர் ரசூல் முஹைதீன் பாரதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பாரதியார் பாடல்கள், கவிதைகள் மக்களிடையே விடுதலை உணர்வையும், சுதந்திர வேட்கையையும் தூண்டியது. பாரதியார் மறைந்தாலும் அவரின் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் உலகம் உள்ளவரை உயிரோட்டமாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைபோட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள்,ரோசம்மாள் , வ.உ.சி கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


