தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான ஹாக்கத்தான் போட்டி துவக்க விழாவிற்கு ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும் பள்ளித் தலைவருமான பாலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டேன்டெக்னோவா-2023 என்ற இக்ஹாக்கத்தான் போட்டிக்கு மாநில அளவில் 50 பள்ளிகள் கலந்து கொண்டன. பள்ளிக்கு மூன்று மாணவர்கள் வீதம் 150 மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலசலிங்கம் கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் சமூக புதுமை மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுபத்ரா, அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்குபேஷன் சென்டர், இன்குபேஷன் அசோசியேட் சஞ்ஜேஸ்வரன் பாபு, தொழில் முனைவோரை மேம்படுத்தும் நிறுவனத்தின் கள ஒருங்கிணைப்பாளர் சுவைந்திரன், தொழில் முனைவோரை மேம்படுத்தும் நிறுவனத்தின் பயிற்சியாளர் ஆ.சிவபாரதி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


