செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழித்தல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை பொருட்கள் ஒழித்தல் விழிப்புணர்வு கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மாயவன் மாணவர்களுக்கு போதை பழக்கத்தின் தீங்கு குறித்து சிறப்புரையாற்றினார். செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபன் பிள்ளை, ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் டாக்டர் கார்த்திக், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் பேசினர்.
செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சமூக சேகவர் சுடலைமுத்து, விவசாய சங்கத்தலைவர் குமார், வருவாய் ஆய்வாளர் மைதிலி, சுகாதார ஆய்வாளர் சர்பின், கிராம நிர்வாக அதிகாரி ஜேசுராணி, கிராம உதவியாளர் சோமசுந்தரம், சமூக ஆர்வலர் சித்திரைப் பாண்டியன், கல்லூரி துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆய்வக போதகர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயந்திரவியல் துறை தலைவர் ஜான் செண்பக துறை நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


