கொங்கராயகுறிச்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் மீட்பு பயிற்சி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது கொங்கராயகுறிச்சி கிராமம். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கொங்கராயகுறிச்சி கிராமத்தில் வெள்ளநீர் புகுந்து விடும். எனவே வருகின்ற காலங்கள் மழைக்காலம் என்பதால் வெள்ள காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள இன்றைய தினம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் மீட்பு பயிற்சி குறித்து கொங்கராயகுறிச்சி ஆற்றுப்படுகை பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். 15 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு வருவாய் ஆய்வாளர் வெள்ளத்தாய், கிராம நிர்வாக அலுவலர் அருணா, கிராம உதவியார் அனந்த பத்மநாதன் ஆகியோர் வெள்ளக்காலங்களில் வரும் தண்ணீர் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.


