தூத்துக்குடி தாளமுத்துநகா் திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலயத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றதுடன் துவங்கியது.
தூத்துக்குடி தாளமுத்துநகா் திவ்ய தஸ்நேவிஸ் மாதா ஆலயத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை நெல்சன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் உதவி பங்கு தந்தை அமல்ராஜ் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10 ஆம் திருவிழா ஆராதனை சவோியாா்புரம் பங்குதந்தை குழந்தைராஜ் அடிகளாா் தலைமையில் தருவைக்குளம் பங்குதந்தை வின்சென்ட் அடிகளாா் மறையுரையாற்றுகிறாா்.
தொடா்ந்து அன்று இரவு திவ்ய தஸ்நேவிஸ் மாதா மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறும். 11 ஆம் திருவிழாவின் ஞாயிறு காலை 7 மணிக்கு ஜெபமாலையுடன் ஆடம்பர பாடல் திருவிழா திருப்பலி நடைபெறும். மாலை 5 மணிக்கு அன்னையின் திருஉருவ தோ்பவனி நடைபெறுகிறது. தொடா்ந்து நற்கருணை ஆசிா் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகா் பங்கு தந்தையா்கள், உதவி பங்கு தந்தை, ஆலய நிா்வாகிகள் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.


