தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், “கைகளை சுத்தமாக வைத்திருப்பதின் அவசியம்” குறித்து நடனம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கைகளை சுத்தமாக பராமரிக்காத காரணத்தால் தொற்று கிருமிகள் மூலம் பல நோய்கள்உருவாகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு வயிறு மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் தாக்குகின்றன. உணவுக்கு முன்பும் பின்பும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை முறையாக கழுவாத காரணத்தாலும் பல நோய்கள் அனைவரையும் தாக்குகின்றன.
இதை முன்னிறுத்தி ரோட்டரி அமைப்பு உலகம் முழுவதும் பள்ளிக் குழந்தைகளிடையே கைகளை சுத்தமாக வைத்திருப்பத்தின் அவசியம் குறித்தும், கைகளை சுத்தமாக எப்படி கழுவ வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் பள்ளி இணைந்து கை கழுவுதல் குறித்து நடனம் மூலம் தூத்துக்குடி ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மீனா குமாரி வரவேற்று பேசினார். ரோட்டரி வின்ஸ் மாவட்ட தலைவர் கண்ணன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இருநூறு பேர் நடனம் ஆடி கைகளை கழுவுதல் குறித்து செயல்விளக்கம் கொடுத்தனர். பள்ளி மாணவர்கள் இதை பார்த்து குழுமியிருந்த பள்ளி மாணவர்கள் கற்றுக்கொண்டனர். பின்னர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் தினேஷ்பாபு சிறப்பு விருந்தினர் உரையாற்றி கை கழுவும் செயல் விளக்கம் கொண்ட பதாகையும் வெளியிட்டார். தொடர்ந்து பள்ளியின் செயலாளர் அருணாசலம், ரோட்டரி உதவி ஆளுநர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் முஹம்மது இப்ராஹிம் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தை சார்ந்த செயலாளர் விக்னேஷ், செந்தில் வீரபாகு, செந்தில் ஆறுமுகம், அபு தாமஸ், ஜூட் அந்தோணி, மந்திரமூர்த்தி, கிருஷ்ணசாமி, முத்துராமன், எலைன்ஸ் ராஜா, பாலமுருகன், ராதாகிருஷ்ணன், பிரபாகரன், ரமேஷ், டாக்டர் ப்ளோரா, பிரதிமா, செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன ஆசிரியை பிரிஸ்கிட்டா கௌரவிக்கப்பட்டார். ஏற்பாடுகளை பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து செய்தனர்.


