1859 – இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்ல்ஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வாஷிங்டன் டிசியைத் தாக்க முயற்சித்தனர்.
1882 – பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1893 – முதன் முறையாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.
1895 – லூமியேர சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படம் ஒன்றைக் காண்பித்தனர்.
1897 – வட முனைக்கு வாயுக்குண்டு மூலம் செல்லுவதற்காக சாலமன் அண்டிரே நோர்வேயின் ஸ்பிட்ஸ்பேர்ஜன் தீவிலிருந்து புறப்பட்டார். ஆனாலும் வாயுக்குண்டு தரையில் மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.
1921 – மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.
1936 – நியூயோர்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.
1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973 – பிறேசில் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1978 – ஸ்பெயினில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.
1979 – ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்குத் திரும்பியது.
1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3 – 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.
1987 – உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.
1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.
1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.
1995 – சேர்பிய இராணுவம் பொஸ்னிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2006 – மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.


