தூத்துக்குடியில் மாணவர்களுக்கான ஆதார் முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில், தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்-மாணவிகளுக்கான ஆதாா் பதிவு முகாமை சமூக நலன் – மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். முன்னதாக சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, பள்ளித் தலைமையாசிரியா் பொ்சியா ஞானமணி, திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.


