சாத்தான்குளம் சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய தம்பதி உள்ளிட்ட 5பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தொட்டிகாரன்விளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேஷ் மனைவி பேச்சித்தாய் (45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுடலைக்கண்ணுவின் ஆடு, மாடுகள் பேச்சித்தாய் வீட்டு தோட்டத்தில் மேய்ந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் சுடலைக்கண்ணு, அவரது மனைவி சுடலைவடிவு, உறவினர்கள் பலவேசம் மனைவி அங்கம்மாள், சண்முகசுந்தரம் மனைவி சுப்புலட்சுமி, இன்னொரு பலவேசம் மனைவி சுதா ஆகியோர் பேச்சித்தாயிடம் தகராறில் ஈடுப்பட்டு அவரை தாக்கி, வீட்டை காலி செய்யாவிட்டாடல் வீட்டோடு கொளுத்தி விடுவதாக மிரட்டினார்களாம். இதில் காயமடைந்த பேச்சித்தாய் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பேச்சித்தாய் அளித்த புகாரின் பேரில் சுடலைக்கண்ணு உள்ளிட்ட 5பேர் மீது தட்டார்மடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.


