காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகம் முன்பிருந்து சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனையின் பேரில் இன்றைய தினம் சுதந்திர இந்தியாவின் பவள விழா ஆண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்கியது.
இதனை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் சங்கர் துவக்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் மெயின் பஜார், கள்ளபிரான் கோயில், ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைகளில் காங்கிரஸ் கொடி ஏந்தி பாதயாத்திரையாக நடந்து சென்றனர். பேரணியானது மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலககம் வந்து நிறைவடைந்தது.
இந்த நிகழ்சியில், ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு. நகர தலைவர் கருப்பசாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி தலைவர் சாம், மாவட்ட இளைஞரணி தலைவர் இசைசங்கர், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயசீலன், துரை, பொதுச்செயலாளர்கள் அலங்காரபாண்டியன், சீனிராஜேந்திரன், சிவகளை பிச்சையா, வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி தாசன், புங்கன், கோதண்டராமன், ஐ.என்.டி.யு.சி சந்திரன், முன்னாள் நகர தலைவர் பாலசுப்பிரமணியன், கருங்குளம் வட்டார பொதுசெயலாளர் மாரிசெல்வம், மகிலா காங்கிரஸ் பஞ்சவர்ணம், ஊடகப்பிரிவு மரியராஜ், நகரச் செயலாளர் மதிசேகரன், வட்டாரச் செயலாளர் நிலமுடையான், இளைஞரணி பெருமாள், நகர துணை செயலாளர் செல்வம், வட்டாரத் துணைத் தலைவர் புகாரி, அமைப்புசாரா அணி கணேசன், வட்டார மகளிரணி, தலைவி பஞ்சவர்ணம், நகர தலைவர் ஜெபமாலை, வட்டார செயலாளர் ராமச்சந்திரன், வட்டார இளைஞர் காங்கிரஸ் ஹைதர்அலி, கிராம கமிட்டி தலைவர் பொன் வேங்கை, மகளிர் அணி பத்ரகாளி, அன்னபூரணி, விஜயலட்சுமி, ஜோதி, டிப்டாப் மாசனமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


