அகஸ்தியர் அருவி தண்ணீர் அசுத்தமாவதை தடுக்காதது ஏன் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள பழமையான படித்துறைகள் , மணடபங்களை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வாழ்க்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவு களை பிறப்பித்தது. மேலும் தாமிரபரணி ஆற்றில் நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தாமிரபரணி ஆற்று நீர், அகஸ்தியர்அருவியில் விழும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் இடம் வரை சுமார் 50 இடங்களில ஆய்வு நடத்தினோம். இதில் அகஸ்தியர்அருவியில் விழும் தண்ணீர் குளிக்க மட்டுமே பயன்படுத்தும் வகையில் உள்ளது. அந்த நீரை குடிப்பதற்கு உதந்ததாக இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என கூறப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள் அப்படியென்றால் இத்தனை நாளாக இது சம்பந்தமாக மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் உங்களின் நடவடிக்கை எங்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்துகிறது என கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் ஐகோர்ட்டு நியமித்த வக்கீல் அருள், மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆகியோர் ஆஜராகி, அகஸ்தியர் அருவிக்கு மேல் பகுதியில் சொரிமுத்து அய்யனார் கோவில் பக்தர்கள், மின்வாரிய குடியிருப்புகளால் ஆற்று நீர் அசுத்தம் அடைகிறது என தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஓதுக்கியதைப் போல தமிரபரணி ஆற்றுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதா? என கேள்வி எழுப்னர்.
அதற்கு மத்திய அரசு வக்கீல் கோவிந்தராஜன் ஆஜராகி இது தொடர்பாக தமிழக அரசு திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினால் பரிசீலிக்கப்படும் என்றார்.
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க மத்திய ஜல் சக்தி அமைச்சகத் திட்டம் இருந்து நிதி வழகங்கக் கோரி மாநில அரசு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பது குறித்து தமிழக அரசு அடுத்த கட்ட விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும். அகஸ்தியர் அருவியில் தண்ணீர் மாசடைந்து உள்ளதை கட்டுப்படுத்துவது குறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள், நெல்லை மாவட்ட கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாம் 3 ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


