இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்தாலங்குறிச்சி ராமவிநாயகர் கோயிலில் சோலார் விளக்கு திறப்பு விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர் , பைரவர் உள்பட தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் தீபாரதனை நடந்தது. அதன்பின் அறநிலையத்துறை சார்பில் ராமவிநாயகர் கோயிலில்அமைக்கப்பட்டுள்ள புதிய சோலார் விளக்கு திறப்பு விழா நடந்தது. அறங்காவலர் காமராசு தலைமை வகித்தார். அறங்காவலர்கள் வள்ளிநாயகம், சுடலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லெட்சுமி நரசிம்மர் பக்த கைங்கர்ய சபா தலைவர் சோமசுந்தரம் சோலார் விளக்கினை துவக்கி வைத்தார். அர்ச்சகர்கள் ராமேஷ், சேகர், சேஷய்யன் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டனர்.


