ரதி அக்னிகோத்ரி (பிறப்பு 10 திசம்பர் 1960) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். ரஜினிகாந்த் நடித்த அன்புக்கு நான் அடிமை, கழுகு, முரட்டுக்காளை ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரதி, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை 1985 பிப்ரவரி 2 அன்று திருமணம் செய்து கொண்டார்.இவரது தந்தை இறந்த போது, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். 1987இல் இவர்களுக்கு தனுஜ் விர்வானி என்ற குழந்தை பிறந்த பின்னர் இவர் தனது கணவருடன் இணைந்து அவரது வணிக நடவடிக்கைகளில் பங்கெடுக்கத் தொடங்கினார்.


