சுஜாதா (10 திசம்பர் 1952 – 6 ஏப்ரல் 2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
போலீஸ் ஸ்டேஷன் என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ஆம் ஆண்டில் இயக்குநர் ஜோஸ் பிரகாஷ், தபஷ்னி என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ஆம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.


