1768 – முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
1799 – பிரான்சு மீட்டரை அதிகாரபூர்வ நீள அலகாக அறிவித்தது.
1817 – மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கென்டக்கியை அக்கூட்டமைப்பின் 13-வது மாநிலமாக ஏற்றுக் கொண்டது.
1868 – உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.
1877 – உருசிய-துருக்கி போர்: உருசிய இராணுவம் பிளெவ்னா நகரைக் கைப்பற்றியது. மீதமிருந்த 25,000 துருக்கியப் படைகள் சரணடைந்தன.
1898 – பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து எசுப்பானிய அமெரிக்கப் போர் முடிவுக்கு வந்தது..
1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்றது.
1902 – எகிப்தில் அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
1902 – தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
1906 – அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் உருசிய-சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக (அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்).
1909 – செல்மா லோவிசா லேகர்லாவ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1932 – தாய்லாந்து அரசியல்சட்ட முடியாட்சி அரசானது.
1936 – இங்கிலாந்தின் எட்டாம் எட்வர்டு முடிதுறப்பதாக அறிவித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக பிரித்தானியாவின் இரண்டு அரச கடற்படைக் கப்பல்கள் சப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டன.
1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் பிலிப்பீன்சில் லூசோன் நகரை அடைந்தனர்.
1948 – மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
1949 – சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் செங்டூ மீதான தாக்குதலை ஆரம்பித்தது. சங் கை செக்கும் அவரது அரசும் சீனக் குடியரசுக்குப் பின்வாங்கினர்.
1953 – பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
1963 – சான்சிபார் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, சுல்தான் சாம்சிதுய் பின் அப்துல்லாவின் கீழ் அரசியல்சட்ட முடியாட்சி அரசைப் பெற்றது.
1978 – அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேல் பிரதமர் பெகின், எகிப்தியத் தலைவர் அன்வர் சாதாத் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.
1983 – அர்கெந்தீனாவில் அரசுத்தலைவர் அராவூஃப் அல்போன்சின் தலைமையில் மக்களாட்சி அமைக்கப்பட்டது.
1984 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
1989 – மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
2006 – ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2016 – துருக்கி, இசுதான்புல் நகரில் உதைபந்தாட்ட அரங்கில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர், 166 பேர் காயமடைந்தனர்.


