நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அளவிலான உபவாச ஜெபக்கூடுகை நடைபெற்றது.
தூத்துக்குடி ஆடிட்டர் பொன்பாண்டி இன்பரசு ஜெபகுறிப்புகளைக் கூறி திருமண்டல மக்களை ஜெபத்தில் வழிநடத்தினார். விருதுநகர் போதகர் டேவிட் பர்னபாஸ் இறைச்செய்தி கொடுத்தார். இக்கூடுகையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து சீசன் ஆப் கிரியேஷன் என்ற சர்வதேச நிகழ்வின் இறுதி நாள் நிகழ்ச்சி திருமறையூர் வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் இயற்கையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மரங்கள் வளர்ப்பதற்கான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து மரக்கன்றுகள் நடப்பட்டது. பங்குபெற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை ராஜா ஸ்டாலின் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற குருவானவர்கள் பொன்னுசாமி, அந்தோணிதாஸ், யோசுவா, செல்வராஜ், திருமண்டல உபவாச ஜெப ஒருங்கிணைப்பாளர் குருவானவர் விஜய் மோகன்ராஜ், ஜெய்சன், ஜெபராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இணை இயக்குனரும், திருமறையூர் மறுரூப ஆலய குருவானவருமான ஜான் சாமுவேல் தலைமையில் சபை மக்கள் செய்திருந்தனர்.


