
நமது தமிழக முதல்வர் அவர்கள் தாமிரபரணி கரை வரலாற்றை போற்றி புகழ்ந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய அறிவிப்பை அவர் அறிவித்துள்ளார்.
நெல்லையில் ரூபாய் 15 கோடியில் நவீன அருங்காட்சியகம் அமைப்பது தமிழர்கள் வரலாற்றை உலகறிய செய்யும் நடவடிக்கை என்று தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
பண்டைய தமிழர்களின் நாகரிகத் தொட்டில் ஆக விளங்கும் ஆதிச்சநல்லூர் சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வில் கிடைத்த பழங்கால அரிய பொருட்களை வைத்து நெல்லையில் ஒரு 15 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட் சியகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அறிவித்தார்.
இது குறித்து தினத்தந்தி 10.09.2021 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எனது பேட்டியையும் அருங்காட்சியக காப்பாட்சியர் பேட்டியும் படத்துடன் வெளியிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி கூறியதாவது; ஆதிச்சநல்லூரில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய் வில் முதுமக்கள் தாழிகள் மண்பாண்ட பொருட்கள் பெரும் பாலான ஆயுதங்கள் தங்க அணிகலன் போன்ற பழங்கால அரிய பொருட்கள் கண்டறியப்பட்டு தமிழர்களின் நாகரீகம் உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டது. இங்குக் கண்டறியப்பட்ட பழங்கால பொருட் களை ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வெளியூர்களுக்குக் கொண்டு சென்று அருங்காட்சி யகங்களில் காட்சிப் படுத்த உள்ளனர். தற்போது ஆதிச்சநல்லூர் சிவகளை கோற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பழங்கால அரிய பொருட்களை நெல்லையில் அமைய உள்ள நவீன அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம் பெரிதும் பயனுள்ளதாக அமையும் இதன் மூலம் தமிழர்களின் நாகரிகத்தை உலக மக்கள் எளிதில் அறிவதுடன் இப்பகுதி தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஈர்க்கும் மையமாக மாறிவிடும்.
சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் நெல்லைக்கு வந்து பொருநை நாகரிகத்தின் தொன்மையை அறிவார்கள் சென்னை கொல்கத்தா போன்ற மற்ற அருங்காட்சியகங்களை விட நெல்லையில் அமையும் அருங்காட்சியகம் சிறப்புப் பெறும் இது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பதோடு தமிழர்களின் நாகரிகம் சிறப்புகள் உலகம் முழுவதும் சென்றடையும் இவ்வாறு அவர் கூறினார்.
எனது பேட்டியை தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது என குறிப்பிட்டுள்ளார்கள். அதில் பொருநை என்பது தாமிரபரணி ஆற்றின் மற்றொரு பெயர் ஆகும் . 1876 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் இந்தியாவில் முதல் முதாலக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தினார்கள், அங்குக் கிடைத்த பழங்கால பொருட்களைத் அவர்கள் நாட்டுக்குக் கொண்டு சென்று விட்டனர், ஆனால் அப்போதைய அகழாய்வு குறித்து முழுமையான அறிக்கையைத் தகவல்களோ வெளிவராமல் இருந்தது. தற்போதைய நெல்லையில் நவீன அருங்காட்சியகம் அவசியமானது. தமிழக அரசு சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் நடைபெறும் அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற பழங்கால பொருட்களை புதிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தலாம், மேலும் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த உலகத்தரம் வாய்ந்த சைட் மியூசியத்தை மிக வேகமாக அமைக்க வேண்டும்.
தமிழர்களின் நாகரீகம் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது என உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.
நமது நாகரிகம் உலகிலேயே தொன்மை வாய்ந்தது என்பதைப் பன்னாட்டு அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு தற்போது முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள அறிவிப்பு மிக முக்கியத்தவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலிற்கும், தொழில் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
என தினத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.