015. ஏழைகளுக்கு உதவும் கிறிஸ்தவ மதபோதகர் டைட்டஸ் ஞான சித்தர்
மதபோதகர் என்றுதான் பாஸ்டர்ஜெ. டைட்டஸ் ஞான சித்தரை நினைத்திருந்தோம். ஆனால் அவருக்குள் பல அவதாரங்கள் இருக்கிறது என்பதைப் பல பேர் அறிந்திருப்பதில்லை. செய்யும் செயலில் நேர்த்தியாகச் செய்து கொண்டிருப்பவர். ஜெபம் செய்வதாக இருந்தாலும் சரி. ஆவிக்குரியவரின் செயலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதாக இருந்தாலும் சரி. ஏழை எளிய மக்களுக்கு உதவுவதாக இருந்தாலும் சரி. அவருக்கு நிகர் அவரே. அவர் இயேசுவைக் கிராம மக்கள் அறியத் தேவ ஊழியத்தில் ஈடுபட்டாலும் கூட, சமூக சேவையைத் தனது இன்னொரு முகமாகவே செய்து வருபவர்.
வசவப்பபுரம், செய்துங்கநல்லூர் பகுதியில் விபத்தில் சிக்குவோரைக் காப்பாற்றப் பிணியூர்தி வசதி செய்து கொடுத்திருப்பது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலூகா வசவபப்புரத்தில் முதியோருக்கு விடுதி அமைத்து , முதியவர்களைப் பாதுகாப்பது, மதிய வேளையில் நெல்லை சந்திப்பில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உணவு கொடுப்பது. இந்த மூன்று காரியமும் சாதாரண காரியமா?. தேவனின் கிருபை இருப்பதால் தான் இவரால் இந்த காரியங்களைச் செய்ய இயலுகிறது. அவரின் சுறுசுறுப்பை பார்த்து நான் வியந்து போய் இருக்கிறேன்.
இந்தியத் தேவசபையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கும் 23 ஆலயங்கள் உள்ளது. இந்த சபைகளுக்கெல்லாம் தலைமை போதகர் ( பிஷப்) என்னும் மற்றுமொரு மாபெரும் பொறுப்பும் உண்டு-. மாத தோறும் தேவகிருபை ஏழை எளிய மக்களுக்குக்கு கிடைக்க மாத இதழ் நடத்தி வருகிறார்.
இதுவரையிலும் 278 திருமணங்களைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் நடத்தி வைத்துள்ளார். நன்றி அய்யா . தொடரட்டும் உங்கள் பணி.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


