செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் மகள் சிந்தியா தேவ் பூப்புனித நீராட்டு விழா வெங்கடேஸ்வரா மகாலில் நடந்தது. கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிந்தியா வை வாழ்த்த நேரில் வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் வரவேற்றார். அமைச்சருக்கு சிந்தியா தேவ் மற்றும் அவரது தாயார் தேவி ஆகியோர் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்தார்.
இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்கள் நடுவதை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் பூப்புனித நீராட்டு விழா சிறுமி அமைச்சர் மற்றும் வந்திருந்தவர்களுக்கு மரக்கன்று கொடுத்தது வரவேற்பதாக இருந்தது.
இது குறித்து பார்வதி நாதன் கூறும் போது, தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் மரம் நட்டு தூய்மையான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்துவருகிறது. தூத்துககுடி மாவட்டம் பசுமை மாவட்டமாக திகழவேண்டும் என அமைச்சர் பெருமக்களும், பாராளுமன்ற உறுப்பினரும் ஏற்பாடு செய்துவருகிறார்கள். எனவே என் பங்குக்கு எங்கள் வீட்டு நிகழ்ச்சியில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக அளித்தோம். அதுபோலவே என் மகளும் என் மனைவியும் அமைச்சருக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். தொடர்ந்து அமைச்சர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார். குறிப்பாக மரக்கன்றுகளை விழாவிற்கு வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். இது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
நிகழ்ச்சியில் மரக்கன்று கொடுத்த பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதனை பலரும் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கருங்குளம் திமுக ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் முன்னாள் சேர்மன் பிச்சையா, முன்னாள் எம்.பி. வசந்தி முருசேகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
&&&


