1886 – நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.
1898 – அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1945 – ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
1956 – இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1967 – இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.
1984 – தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
1986 – யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 – இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
1996 – வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1998 – முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
1999 – கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.
2003 – நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2006 – ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.


