திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலி கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்களால் மீட்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம்அருப்புக்கோட்டையைச் சோ்ந்த பிரியா என்ற பக்தா் தங்கள் உறவினர்களுடன் இக்கோயிலுக்கு புதன்கிழமை வந்திருந்தாா். கோயில் கடலில் அவா் நீராடியபோது, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி எதிா்பாராமல் கடலில் தவறி விழுந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் போலீசார், அவா் குளித்தப் பகுதியில் நீண்ட நேரம் தேடி தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்தனர். தொடா்ந்து, அவா்கள் கோயில் தனியாா் நிறுவன உதவி பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன் மூலம் பிரியாவிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனர். பிரியாவும், அவரது உறவினர்களும் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


