தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வீராங்கனைக் குழு சார்பாக “அழகி” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெஸ்சி பெர்னாண்டோ சிறப்புரை ஆற்றினார். முக்கிய விருந்தினராக சமூக ஆர்வலரும், ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியருமான பாத்திமா பாபு பங்கேற்றார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி சுகாதாரத் தொழிலாளர்கள் வெங்கடேஸ்வரி, காளீஸ்வரி மற்றும் ஆனந்தஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
சுகாதாரத் தொழிலாளர் காளீஸ்வரி, தனது அன்றாடப் போராட்டங்கள், கல்வி மற்றும் நேர மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ச்சி மிகுந்த முறையில் விவரித்துப் பேசினார்.
தொடர்ந்து சக்தி என்பவரின் பறை இசையுடன், பெண்களின் உள்நிலைச் சக்தியைக் கொண்டாடும் துணிச்சலான பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. எளிய உழைப்பாளர்களையும் பெண்களின் சுயசக்தியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


