தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாணவர்களுக்கான கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாம் கே. ஆர். ரெசார்ட்டில் நடந்தது. இதன் தொடக்க விழாவில் பரதநாட்டியம் மூலம் பயிற்சி துவங்கியது. புத்தகத்திற்கு எத்தனை முகம் என கவிஞர் கண்மணி ராசா «பிசனார். அதன் பின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆர்க்கஸ்ட்டா, விழிப்புணர்வு நாடகம், கிராமிய நடனம் நடந்தது. மதியம் அமர்வில் தொல்லியல் ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் கலை நன்மணி முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். சிறந்த கேள்வி கேட்ட மாணவி கௌரவிக்கப்பட்டார். இந்த கொண்டாட்டம் தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தென்காசிமாவட்ட தமிழக கல்வித்துறை செய்திருந்தனர்.


